முதல்வர் முக ஸ்டாலினின் காரை, திருட்டு பைக்கில் வந்து ஓவர்டேக் செய்ய முயன்ற திருட்டு புள்ளிங்கோ கைது.!  - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மதியம் தனது வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

தமிழக முதல்வரின் கான்வாய் (பாதுகாப்பு அணிவகுப்பு) நேப்பியர் பாலத்தை கடந்து வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் முதல்வரின் கால்வாயை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

தொடர்ந்து முதல்வரின் கான்வாயை முந்திச் செல்ல முயன்ற அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தில் எந்த நம்பரும் இல்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்த போலீசார், கோட்டை காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அஜித் குமார் (20 வயது) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kottai police arrest bike robbery culprit ajithkumar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->