ச்சா! பிதற்றல் மன்னன் வைகோ.. இனி பொய்க்கோ என்றுதான் அழைக்க வேண்டும்! - வைகைச் செல்வன்
king of lies Vaiko from now on you should call him Poiko Vaigai Selvan
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று தெரிவித்திருந்தார்.

வைகைச்செல்வன்:
இதுகுறித்து அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருப்பதாவது,"வைகோ தொடர்ந்து அவருடைய நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக அ.தி.மு.க.வை தேடி வந்தார்.
போயஸ் தோட்டத்தை தேடி வந்தார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தேடி வந்தார்.தேடி வந்தது வீண்போகவில்லை. அவருடைய கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது.
அவருடைய சின்னமான பம்பரம் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைப்பதற்காக அ.தி.மு.க. கடமையாற்றி அந்த வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்ததை அவர் மறந்து விடக்கூடாது.
வைகோ தற்போது வயது முதிர்வு காரணத்தினாலும், ஞாபக மறதியின் காரணத்தினாலும் ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.ஆகவே, வைகோவை இனிமேல் பொய்கோ என்றுதான் சொல்ல வேண்டும் என்பதை போல இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
king of lies Vaiko from now on you should call him Poiko Vaigai Selvan