ராகுல்காந்திக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சியில்லை - பதிலடி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம்!
kerala cpim congress Oommen Chandy Rahul Gandhi
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 2023 ஜூலை 18ஆம் தேதி மறைந்தார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று புதுப்பள்ளியில் நடைபெற்றது.
இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே மாதிரியான சிந்தனைக் கோட்பாடுகளை பின்பற்றுவதாக கூறி விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், மதவெறி பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
kerala cpim congress Oommen Chandy Rahul Gandhi