ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல - முதல்வர் ஸ்டாலின் உரை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் தமிழில் உரையாற்றினார். அவரின் அந்த உரையில்,

"ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல. 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்றுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை. 

மாநில வளர்ச்சிக்கான திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழுக்களை மத்திய அரசு கலைத்து விட்டது. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி சட்டங்களை இயற்றுகிறது பாஜக.

மாநிலங்களின் உரிமைக்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டும். மாநில உரிமையை காத்திட மாநில முதல்வர்கள் குழுவை அமைத்திட வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார். வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் மாநாடு நடைபெறுகிறது.

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.  மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க முயற்சி. ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது.

ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது" என்று முதலவர் ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala CMStalin CPIM23rdPartyCongress PinarayiVijayan


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->