கச்சத்தீவு விவகாரம்: திமுக நாடகம் நடத்துகிறது – பழனிசாமி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த திமுக அரசை, நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் முன்வைத்தார். இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

பாஜக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவைத் தலைவர் அப்பாவு, தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கச்சத்தீவை மீட்பதில் திமுக அரசு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் உரிமை பறிக்கப்படும் போது திமுக மத்திய அரசை வலியுறுத்தவில்லை. அவர்கள் ஆட்சியில் 5 பிரதமர்கள் மத்தியில் இருந்தபோதும், ஒருபோதும் இது குறித்து வலியுறுத்தப்படவில்லை. தேர்தலை முன்னிட்டு மட்டுமே இப்போது தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்."

அதுமட்டுமல்லாது, "நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக அரசு ஏன் இதனை முன்வைக்கவில்லை? நான் இதை பேரவையில் முழுமையாக விவாதிக்க அனுமதி கேட்க, எனக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை." என்று குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Katchatheevu issue DMK TN Govt MK Stalin ADMK Edappadi Palaniswami 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->