உங்க மக்களையே கவனிக்க முடியவில்லை, இதில் காஷ்மீர் வேணுமா? பாகிஸ்தான் அதிபருக்கு உமர் அப்துல்லாவின் பதிலடி!
Kashmir War of Words Omar Abdullah Sharp Retort
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீசிய கருத்துக்கு, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது பாணியில் மிகச் சுருக்கமாகவும், எதார்த்தமாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானால் கடைபிடிக்கப்படும் "காஷ்மீர் ஒற்றுமை தினத்தை" முன்னிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) சட்டசபையில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:
"காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி. நிச்சயம் ஒருநாள் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்ற பாகிஸ்தான் பிரதமரின் இந்த பகல் கனவை கிண்டல் செய்யும் விதமாக உமர் அப்துல்லா ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார்:
நாம் அவர்களுடன் சேரப் போகிறோமா? முதலில் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் மக்களையே அவர்களால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. இதில் நம்மையும் வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் உள்நாட்டு குழப்பத்திலும் சிக்கித் தவிக்கும் நிலையில், உமரின் இந்த எதார்த்தமான கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு:
மறுபுறம், இந்தியத் தலைவர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்றும், அதனை விரைவில் மீட்டெடுப்பதே இந்தியாவின் இலக்கு என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
English Summary
Kashmir War of Words Omar Abdullah Sharp Retort