ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை கொண்டுவந்த பாகிஸ்தான்!! சம்மட்டி அடி கொடுத்த இந்தியா!! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பவை என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஜெனீவா நகரில் 42வது ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்க்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேசி இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். காஷ்மீரிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டை முன்வைத்தார்.

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்கு பகுதி செயலாளர் விஜய்தாக்கூர் சிங் மற்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா ஆகியோர் பாகிஸ்தான் இந்தியா மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த  370வது சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்த விஜய்தாக்கூர் சிங்,  மேலும்,  370வது சிறப்பு சட்டபுரிவு ரத்து செய்தன் மூலம் பாலின பாகுபாடு நீக்கப்பட்டு கல்வி உரிமை கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளதாக கூறினார். காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது அங்கு அமைதி நிலவுவதாக வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நேரலையை வர்ணணை செய்வது போல இந்தியா மீது பொய்யான புகார்களை கூறும் நாடு, பயங்கரவாதத்தின் மையமாக இருப்பதை உலக நாடுகள் அனைத்தும் அறியும் என பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அவர் சாடினார். 

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேசி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என கூறினார். இது நாள் வரை காஷ்மீரை சர்ச்சைக்குரிய நிலம் என கூறி வந்த  பாகிஸ்தான், காஷ்மீரை இந்திய மாநிலம் என குரேசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kashmir issue discused in united nations human rights council


கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
Seithipunal