தவெக விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு!
Karur Stampede TN Govt TVK Vijay Chennai HC DMK
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்றவர், தமிழக வெற்றிக்கழக கூட்டங்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாமல் அனுமதி வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார்.
செந்தில் கண்ணன் தாக்கல் செய்த இந்த வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் முதலில் அனுமதி அளித்தார்.
ஆனால் பின்னர் மனுவை அவசர வழக்காக ஏற்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வரவில்லை.
மேலும், இந்த கோரிக்கையை தவெக சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால்தான் விசாரிக்க வாய்ப்பு இருக்கும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Karur Stampede TN Govt TVK Vijay Chennai HC DMK