விரைவில் கரூர் செல்லும் தவெக விஜய்: போலீசாரிடம் மனு கொடுக்க தீர்மானம்..! - Seithipunal
Seithipunal


கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதியுதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay decides to file a petition with the police to go to Karur soon


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->