அல்லு அர்ஜுன் பாணியில் விஜய் கைது செய்யப்படுவாரா?!
Karur Stampede TN Govt TVK Vijay
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 9 குழந்தைகள் உட்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலையும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நடிகை ஓவியா தனது கருத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனால் விஜயை கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்து விவாதத்தை தூண்டியுள்ளது.
தெலுங்கானாவில் புஷ்பா 2 பட வெளியீட்டின்போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே பாணியில் தமிழ்நாட்டிலும் விஜயை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
English Summary
Karur Stampede TN Govt TVK Vijay