முதல்வருடன் நாங்கள் துணை இருப்போம்... இந்திய கம்னியூஸ்ட் வீரபாண்டியன் பேட்டி!
Karur Stampede ADMK edappadi palanisamy DMK CPI
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், கரூர் சம்பவம் நடக்கக்கூடாதது, ஆனால் அந்த நிகழ்வுக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், சம்பவத்திற்கு உடனே முதல்வர் கரூருக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்..
மேலும், எண்ணூர் சம்பவத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததை நேரில் சென்று பார்ந்தோம், சம்பவம் குறித்து கேட்டறிந்தோம். தொழிலாளர்களின் நலனில் அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
கரூர் சம்பவத்தில் திருமாளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இருப்பினும், கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணியில் எந்த பிரிவும் இல்லை. கூட்டணியில் உள்ள தலைவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு எந்த தடையும் இல்லாது இருக்கிறது. கூட்டணியில் சுதந்திரமாக செயல்படுகிறோம்,
2026 தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம். கூட்டணிக்கு அப்பால், தேச நலனை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறோம். விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும், அந்த கூட்டணியை தோற்கடிப்போம்.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன சட்டம் நெருக்கடியில் உள்ளது. மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது.
தனிப்பட்ட முறையில் ஆளுநர் அல்லது பா.ஜ.க. மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி முதல்வரைக் கடந்து செல்ல முயற்சிப்பது ஜனநாயகத்திற்கான தாக்குதலாகும். இதற்கு எதிராக தமிழக அரசு போராட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதில் முதல்வருடன் நாங்கள் துணை இருப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Karur Stampede ADMK edappadi palanisamy DMK CPI