கரூர் பேரதிர்ச்சி! 39 உயிரிழப்பு தொடர்பில் ஆளுநர் ரவி விரிவான அறிக்கை கேட்டு உத்தரவு...!
Karur earthquake Governor Ravi orders detailed report 39 deaths
கரூரில் நேற்று இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சோகமாக மாறி, 39 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு அரசியல் வட்டாரங்கள் முதல் பொதுமக்கள் வரை கடும் கண்டனங்களும், இரங்கல்களும் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உண்மையை வெளிக்கொணர, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு, இச்சம்பவம் குறித்த முழுமையான விவர அறிக்கையை மாநில அரசிடம் கேட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karur earthquake Governor Ravi orders detailed report 39 deaths