போங்கப்பா சும்மா! கரூர் விபத்து அரசியல் ஆகக்கூடாது...விஜய் கைது தேவையற்றது!- கே.எஸ்.அழகிரி
Karur accident should not be politicized Vijays arrest unnecessary KS Alagiri
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று, வாக்கு திருட்டை தடுக்க தவறிய இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜனதா அரசை கண்டித்து விறுவிறுப்பான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.மேலும், விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசக்குமார் தலைமையேற்றார்.
இதில் மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அங்கு நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், திருக்கோவிலூர் தொகுதி பொறுப்பாளர் ஏ.ஆர். வாசிம் ராஜா, நகரமன்ற கவுன்சிலர்கள் இம்ரான் கான், சுரேஷ் ராம், எஸ்.சி. பிரிவு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, கடுமையாக தெரிவித்ததாவது,"கடந்த 9 ஆண்டுகளாக வரி குறைப்பு செய்யாத மோடி அரசு, தேர்தலை முன்னிட்டு திடீரென வரியை குறைத்துள்ளது. இதுவே அரசின் தேர்தல் நோக்கம்.
9 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்து, இப்போது ரூ.2½ லட்சம் கோடியை ‘தீபாவளி பரிசு’ என தெரிவிப்பது ஏமாற்று நாடகம் தான்" என்று தெரிவித்தார்.மேலும், கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவம் குறித்து குறிப்பிட்டதாவது,"விஜய்யை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அது தேவையற்ற நடவடிக்கை ஆகும். நிகழ்ச்சியில் கூட்டம் எதிர்பாராத அளவில் அதிகரித்ததே விபத்துக்கு காரணம்.முதலமைச்சர் நிதானமாக செயல்படுகிறார்; ஆனால் திருமாவளவனின் கருத்துக்கள் அரசுக்கும் விஜய்க்கும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Karur accident should not be politicized Vijays arrest unnecessary KS Alagiri