"போடா முட்டா பயலே".. சின்னம்மா தான் காரணம்.. கொதித்துப்போன கருணாஸ்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பு கடந்த தேர்தல்களில் அதிமுகவுககு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் எதிர்வரும் மக்களவைப் பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளது. 

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரித்து நடிகர் கருணாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சிவகாசியில் நேற்று இரவு திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் "கனமழின் காரணமாக சென்னை தென்காசி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் அனைவரும் உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். ஒரு மாநில மக்களிடமிருந்து வரியாக வசூலித்த ஒன்றிய அரசு. அந்த மக்கள் இயற்கை வளத்தில் சீரழிவில் பாதிப்பு ஆகி நீர் கதையா நிக்கும் போது மாநில அரசு முதலமைச்சராக இருக்கக்கூடிய அண்ணன் ஸ்டாலின் அவர்கள் அதற்கான நிவாரண நிதியை கேட்டு இருக்கிறார். 

அதைக் கொடுப்பதுதான் ஒன்றிய அரசின் கடமை. ஆனால் அதை செய்ய மறுக்கின்றனர். ஒரு மத்திய அரசின் நிதி மாநில அரசுக்கு வழங்க மறுக்கிறது. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் 50 லட்சம் கோடி தான் கடனாக இருந்தது. ஆனால் மோடியின் இந்த செயலற்று அரசாங்கத்தால் 100 லட்சம் கோடி கடனாகியுள்ளது. யார் இந்த கடனை கட்டுவது? யார் மேலே இந்த கடனை வாங்கி உள்ளனர்?

மக்களாகிய உங்கள் மேலே தான் அந்த கடன் வாங்கப்பட்டுள்ளது. இன்று குடியுரிமைச் சட்டம் நீர்க்கோன்ற சட்டங்கள் யார் வைத்து உள்ளார் வந்தது. நம்பிக்கை துரோகி எடப்பாடி அன்று ஒத்துக்கொண்டதால்தான் வந்தது என ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தாய் கருணாஸ் ஒரே கேள்வியால் ஆப் செய்தார் கூட்டத்தில் இருந்த ஒருவர். 

கூட்டத்தில் இருந்து வந்த குரல் ஒன்று அன்னைக்கு நீ தானே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓட்டு போட்ட என கேட்க இதனால் பதறிப் போன கருணாஸ் " எதுக்காக ஓட்டு... ஏம்பா அன்னைக்கு சின்னம்மா ஓட்டு போட சொன்னாங்க.. என்னப்பா நீ டேய் எனக்கு ஒரு குவாட்டர் வாங்கிட்டு வாங்கடா.. 

சின்னம்மா போட சொல்லுச்சுபா அன்னைக்கு... அதான்பா கேள்வி கேளுப்பா. சின்னம்மா தானே போட சொல்லுச்சு... முட்டாப் பயலே போடா அங்குட்டு.. அண்ணே இங்க வாங்க சின்னம்மா போட சொல்லுச்சுல.. எடப்பாடிய முதலமைச்சராக யார் தேர்ந்தெடுத்தா? நான் தான் ஓட்டு போட்டேன்.. தினகரன் தானே தேர்ந்தெடுத்தார்.."என நடிகர் கருணாஸ் பேசி உள்ளார் கொந்தளிப்பாக. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunas tension in campaign cadre ask about EPS


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->