'ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பேசிய போது எதிர்த்து புகார் அளித்தார்கள்'; கார்த்தி சிதம்பரம் பேசிய ஆடியோவால் பரபரப்பு..!
Karthi Chidambaram gives a sensational interview stating that complaints were lodged against him when he demanded a share in the administration
''கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் புகார் அளித்தார்கள்'' என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ள ஆடியோ ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இன்று 'கூட்டணி ஆட்சி வேண்டும்' என்று தங்களை முதன்மைப்படுத்திக் கொள்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, புதுக்கோட்டையிலும் சிவகங்கையிலும் நான் பேசும் போது, 'வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்' என்று முதன்முதலில் கூறினேன். ஆனால், நான் அதைச் சொன்ன உடனே, 'கூட்டணிக்குக் களங்கம் விளைவிக்கிறார் கார்த்தி சிதம்பரம்' என்று சத்தியமூர்த்தி பவனில் எனக்கு எதிராக புகார் கொடுத்தார்கள் என்றும், என்னை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் கூறினார்கள். புகார் கொடுத்தார்கள் யார் என்ற விவரங்கள் என்னிடம் இப்போதும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின் போது, பொதுநலன் சார்ந்த விஷயங்களில் இருக்கக்கூடிய குறைகளை நான் சுட்டிக்காட்டியபோது கூட, எனக்கு யாரும் ஆதரவாக நிற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் உட்பட நம்முடைய எந்தவொரு எம்.எல்.ஏ-வும் ஒரு வார்த்தை கூட எனக்கு ஆதரவாகப் பேசியது கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திமுக ஆட்சியின் குறைகளை நான் சொன்னபோது, எல்லாரும் சட்டமன்றத்தில் அமைதியாகத்தான் இருந்தார்கள் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், தவெக காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுகையில், புதிய கூட்டணியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பெங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற கோரிக்கையை புதிதாக இவர்கள் தான் உருவாக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
Karthi Chidambaram gives a sensational interview stating that complaints were lodged against him when he demanded a share in the administration