'முதல்வர் விஜய் விரல் துணியில் விவரங்களை வைத்துக் கொண்டு திட்டங்களை மேற் கொள்கிறார்; ஜே.சி.டி.பிரபாகர்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரி செண்டிருந்தார். முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது கூறியுள்ளதாவது;

என்னுடைய நெருங்கிய உறவினர் தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி வெள்ளி விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இங்கு வந்துள்ளேன்.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கும் ஓர் அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எம்எல்ஏக்களின் விருப்பமும் அதுதான். அதன்படி ஆட்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோவை சிறுமி கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள ஜே.சி.டி.பிரபாகர்,

''ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், விரல் நுனியில் விவரங்களை வைத்து வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களையும், பல்வேறு சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் நல்வாழ்த்துகள் கூறுவதும் நமது கடமை'' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், விமான நிலையத்துக்கு தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டு வருவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு ''இது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால், அரசின் கவனத்துக்கு அதனைக் கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

JCD Prabhakaran remarks that Chief Minister Vijay implements schemes with all the details at his fingertips


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->