முன்னாள் முதல்வர் தோல்வி! காங்கிரசுக்கு மரண அடி கொடுத்த பாஜக! சவால் விட்டது போலவே வெற்றிகொடி  நாட்டிய வேட்பாளர்!  - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில், அம்மாநிலமுன்னாள் முதலமைச்சரும், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இருந்து இணைந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. இதனை அடுத்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் கட்சி ஹூப்ளி-தார்வாட் மத்திய  தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். 

இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஜெகதீஷ் ஷெட்டர் 29340 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கினாகை 64910 வாக்குகள் பெற்று, வெற்றியை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே பாஜக தரப்பில் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற மாட்டார் என்று சவால் விடுத்திருந்த நிலையில், அது உறுதியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka election results Congress leader Jagadish Shettar loss


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->