'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை': அமித் ஷாவுக்கு கனிமொழி பதிலடி..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் அலுவலக மொழித்துறையின் 50-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் எந்தவொரு மொழிக்கும் இந்தி எதிராக இருக்க முடியாது என்பதை மனதார நம்புகிறேன் என்றும், இந்தி மொழி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் நண்பன் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, எந்த மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. எந்தவொரு வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். 

அத்துடன், ஒருவரின் சொந்த மொழியைப் போற்றுவதற்கான, சொந்த மொழியைப் பேசுவதற்கான, சொந்த மொழியில் சிந்திப்பதற்கான உந்துதல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்திய மொழிகளை உயிருடன் வைத்திருப்பதும், அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம் என்றும் வலியுறுத்தினார். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளுக்கும், குறிப்பாக அதிகாரப்பூர்வ மொழிக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, அவருடைய எக்ஸ் பக்கத்தில் "சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi MP responds to Amit Shahs speech on language


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->