திமுக பதவிகளில் 33% மகளிருக்கு வழங்க கனிமொழி எம்பி வலியுறுத்தல்..!
Kanimozhi MP insists on giving 33 percentage of DMK posts to women
திமுக-வில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி வழங்க வேண்டும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, கட்சிப் பதவியில் இருந்தே மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனிமொழியை தொடர்ந்து பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக நாம் செயல்பட வேண்டும் என்றும், மாமா, மச்சான் என்ற உறவு முறையெல்லாம் வைத்து பேரவையில் பேசக்கூடாது என்றும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அத்துடன், சட்டமன்ற செயல்பாடுகளைப் பார்த்தால், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவைக்கு இந்த முறை செல்லாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது என்றும் அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதே கருத்தை பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, இளைஞரணி நிர்வாகி இளையராஜா உள்ளிட்டோர் எடுத்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பேரவையில் நிச்சயம் சரியாக செயல்படுவோம் என்றும், திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதை நேரலையில் காண்பிப்பதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
English Summary
Kanimozhi MP insists on giving 33 percentage of DMK posts to women