கனடாவில் ஆட்சியமைக்க கிங் மேக்கரா ஆகிய இந்திய வம்சாவளியினர்.! - Seithipunal
Seithipunal


கனடாவில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற முடிந்தது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் கைபற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கனடா பிரதமராகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை அடையாத போதும் அவர் தொடர்ந்து தமது பதவியில் நீடித்து வருகிறார். 

கனடாவில் மொத்தமுள்ள 338 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியமைக்க 170 இடங்கள் தேவை. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை அடையவில்லை.

இந்தநிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களுடன் மைனாரிட்டி அரசாக உள்ளது. இதனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆட்சியை தக்கவைக்க வெளியில் இருந்து ஆதரவு தேவைப்படுகிறது.  

இதையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோ புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவை நாடியுள்ளார். புதிய ஜனநாயக கட்சியின் தலைவர்  ஜத்மீத் சிங், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவளிக்கலாம் என கூறப்படுகிறது. 40 வயதான ஜத்மீத் சிங் இந்திய வம்சாவளியினரான  மனித உரிமை வழக்கறிஞரானகின் கட்சி அரசுக்கு வெளியில் இருந்து .

கடந்த தேர்தலின் போது 44 இடங்களை வென்ற ஜக்மீத்தின் கட்சி இந்த முறை தன் கைவசமிருந்த 20 இடங்களை இழந்து 24 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்து. இருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமைலான மைனாரிட்டி அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாக ஜக்மீத்தை கனடா அரசியலில் கிங் மேக்கராக மாற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanada election results


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->