''ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்''; முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்​வ​ராகப் தவெக தலை​வர் விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். அப்போது, குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை உரு​வாக்​கப்​படும் என்று தேர்தல் வாக்குறுதியின் படி, பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்திட்​டார்.

இதனைத்தொடர்ந்து, இன்று சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்தார்.

முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan welcomes the Singappen Special task force initiative launched by Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->