பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்.! இவரை எல்லாம் கட்சியில் சேர்க்கிறார்களே.! பாஜகவினர் அதிருப்தி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பலம் இல்லாத பாஜக, தற்போது முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. தேசிய அளவில் இரண்டாவது முறையாக ஆளும் கட்சி என்பதால் திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளிருந்து நிர்வாகிகள் பலரும் சமீப காலமாக பாஜகவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாநில கட்சிகளிலிருந்து புதிதாக வந்து இணையும் போது அவர்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக பாஜகவில் பயணித்து வருபவர்களுக்கு சற்று மனஸ்தாபத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இந்நிலையில் வடசென்னையில் பல வழக்குகளில் தொடர்புடையவரும் காவல்துறையால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான கல்வெட்டு ரவி மற்றும் அவரது கூட்டாளி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேற்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழக காவல்துறை பட்டியலில் ஏ ப்ளஸில் இருந்த கல்வெட்டு ரவி எங்கே தன்னை என்கவுண்ட்டர் செய்துவிடுவார்களோ என பயந்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக பலரும் பேசி வருகின்றனர். இதற்கிடையே புதிதாக பலர் பாஜகவில் இணைவதால் தங்களுக்கான பதவிகள் பறிப்போவதாக பாஜகவில் நீண்டகால  பயணித்து வரும் தொண்டர்களும் நிர்வாகிகளும் வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் ரவுடியை எல்லாம் கட்சியில் சேர்க்கிறார்களே பாஜகவினர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kalvettu ravi joined bjp


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->