விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த ஶ்ரீமதியின் பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் இருந்த அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாணவியின் தாய் புகார் கொடுத்திருந்தார். இதன் விசாரணை முடிவில் மாணவி ஸ்ரீமதி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தகைய சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் உறவினர்கள் சந்தித்துள்ளனர். 

இது குறித்து திருமாவளவன் எம்பி, "கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர் சென்னையில் இருக்கும் கட்சி தலைமையகத்தில் என்னை சந்தித்து பேசினர். அப்போது தங்களின் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். 'விசிவினர் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் செய்ததற்கு நன்றி' என்று தெரிவித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்க ஆதரவு கொடுக்குமாறு வலியுறுத்தினர்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Srimathi parents meet vck Thirumalavavan in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->