#BigBreaking || திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மாணவி மரணம் குறித்து கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடந்த நிலையில், நேற்றைய தினம் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறையும், கலவரமாக வெடித்தது.

மேலும் அந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போலீசாரின் வாகனம் ஒன்றும் கொளுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாணவி மரணம் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி, 

"வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும்.

திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதி, பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி, இனிமேல் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi school issue hc order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->