தமிழகத்தில் புதிதாக உருவாகப்போகும் மாவட்டம்.. அமைச்சர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைத்து சமூக மக்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவிற்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏபிகே பழனி செல்வம் தலைமை வகித்தார். பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் எம் பரமசிவம் முன்னிலை வகித்தார். பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டிசெல்வரத்தினம் வரவேற்றார். 

இந்த பாராட்டு விழாவில் அமைச்சருக்கு மலர் கிரீடம் அணிவித்து, வேல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக பணியாற்றிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளேன். கோவில்பட்டி நகருக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளேன்.

248 கிராம குடிநீர் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் பம்பை ஆறு-வைகை ஆறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இளையரசனேந்தல் குறுவட்டத்தை இணைத்து, கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க திட்டம் உள்ளது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju says new district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal