எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி!
Judge dismisses petition filed by Edappadi Palaniswami
சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ''எடப்பாடி பழனிசாமி'' அவர்கள், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுவில் குறிப்பிட்டதாவது," பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
அதில் ,"சூரியமூர்த்தி, அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது" என்று குறிப்பிட்டிருந்தது.
சிவசக்தி வேல் கண்ணன்:
இந்த வழக்கை விசாரித்த 4-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி வேல் கண்ணன் தெரிவிக்கையில்," கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது என்று தெரிவித்து சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டார்.
English Summary
Judge dismisses petition filed by Edappadi Palaniswami