மனைவிக்காக பிரச்சார களத்தில் குதித்த ஜடேஜா.! மோடியின் பெயரால் புகழாரம்.!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 முதல் 5 தேதிகள் வரை சட்டப்பேரவை தேர்தல் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கே தேர்தல் களமானது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. 182 தொகுதிகள் இருக்கின்றன. 

ஐந்து முறை வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், ஆறாவது முறையாகவும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு யுக்திகளை கையாண்டு அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 

அதே நேரத்தில் காங்கிரஸ் மீண்டும் தனது அதிகாரத்தை நிலை நாட்ட போராடிக் கொண்டிருக்கிறது. எப்போதும் இல்லாத ஒரு விஷயமாக ஆம் ஆத்மியும் போட்டியிட ஆயத்தமாகியுள்ளது. குஜராத்தில் தற்போது மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. பாஜக இரு கட்டங்களாக 166 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 

இதில் ஜாம்நகர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிடுகிறார். தனது மனைவிக்காக ஜடேஜா பிரச்சாரம் செய்து வருகின்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. 

அதில் பேசிய ஜடேஜா, "பிரதமர் மோடியின் வழியை பின்பற்றி எனது மனைவி ரிபாவா அரசியல் செய்கிறார். அவருடைய கொள்கைகளை பின்பற்றி மக்களுக்கு நல்லது செய்ய ரிபாவா விரும்புகிறார். அவர் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். உங்கள் ஆதரவு தேவை." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jadeja campaign in gujarat


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->