வரலாறு காணாத பனிப்பொழிவு: அவசரநிலை பிரகடனம்! அமெரிக்காவில் உயிரிழப்பும் ஸ்தம்பித்த போக்குவரத்தும்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும் குளிர்காலம், இம்முறை வரலாறு காணாத அளவுக்கு கடும் கோரத்துடன் தாக்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் பல மாகாணங்களில் பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களே உறைந்துபோன நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் பனிப்பொழிவு மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடல் அருகே புதிதாக உருவான சக்திவாய்ந்த பனிப்புயலுக்கு “பெர்ன்” என பெயரிட்டு அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.

மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களை உலுக்கிய இந்த புயல், கடந்த இரண்டு நாட்களாக கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது பனியைப் பொழிந்து வருகிறது.

பனிப்பொழிவின் தாக்கம் அசாதாரண அளவை எட்டியதைத் தொடர்ந்து, நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை பரவி வாழும் சுமார் 14 கோடி மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டக்கி உள்ளிட்ட 12 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.“பெர்ன்” பனிப்புயலின் கோர தாண்டவத்தில் பென்சில்வேனியா மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகபட்சமாக 63 செ.மீ வரை பனி குவிந்தது.

உலகப் புகழ்பெற்ற நியூயார்க் நகரமே 25 செ.மீ பனியில் மூழ்கி, வெள்ளை போர்வை போர்த்திய மாயக் காட்சியாக மாறியுள்ளது.இந்த பனிப்புயலால் சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.

வெளிநாடு மற்றும் உள்ளூர் பயணங்களுக்காக திட்டமிடப்பட்ட 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்கள் ஸ்தம்பித்துள்ளன. பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான குளிர், கடும் உறைபனி, பனிமழை இன்னும் பல நாட்கள் நீடிக்கும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. முன்பு எப்போதும் காணாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், அமெரிக்கா முழுவதும் மக்கள் அச்சம், அவதி, அதிர்ச்சி ஆகியவற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unprecedented snowfall Deaths and paralyzed transportation United States Declaration state emergency


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->