நாடாளுமன்றம் சூடுபிடிக்கிறது! ஏப்ரல் 2 வரை அரசியல் பரபரப்பு- பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்...! - Seithipunal
Seithipunal


நாட்டின் அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத் தொடரில், பிப்ரவரி 1-ஆம் தேதி 2026–27 நிதி ஆண்டிற்கான முக்கியமான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதனால் அரசியல், பொருளாதார வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு, கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய பிரச்சனைகள், நிறைவேற்றப்பட உள்ள சட்ட மசோதாக்கள், அவையை சுமூகமாக நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள உள்ளனர்.

வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுகளின் திசையை தீர்மானிக்கும் முக்கிய கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parliament heats up Political tension until April 2 budget session begins tomorrow


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->