வர்த்தக மேடையில் டிரம்ப் அதிரடி: தென் கொரியாவுக்கும் 25% வரி உயர்வு...! - Seithipunal
Seithipunal


உலக வர்த்தக மேடையில் மீண்டும் பரபரப்பை கிளப்பும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை தீவிரப்படுத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்திய தயாரிப்புகளுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்தார்.

இதற்குப் பிறகு, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்திய பொருட்களுக்கான வரியை நேரடியாக 50 சதவீதமாக உயர்த்தி அதிர்ச்சி அளித்தார்.இந்தியாவை மட்டும் அல்லாமல், பல்வேறு நாடுகளையும் குறிவைத்து டிரம்ப் நிர்வாகம் வர்த்தகத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது தென் கொரியா மீது அடுத்த அதிரடி விழுந்துள்ளது. தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தென் கொரியா தாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், அதற்கான “எச்சரிக்கை நடவடிக்கையாக” இந்த வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார்.

ஆனால் இந்த வரி உயர்வு குறித்து முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை பெறப்படவில்லை என்றும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. உலக வர்த்தக சந்தையில் டிரம்பின் இந்த தொடர் நடவடிக்கைகள் புதிய பதற்றத்தை உருவாக்கி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump shock move trade front 25 percentage tariff increase for South Korea too


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->