பொதுமக்கள் கோரிக்கை நிறைவேறியது: திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் சேவை...!
Public demand fulfilled Express train service at Thiruverumbur railway station
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கைக்கு இனிய நிறைவு கிடைத்துள்ளது.
அந்த வேண்டுகோளை முன்னெடுத்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தீவிர முயற்சி மேற்கொண்டதன் பயனாக, முதலில் தாம்பரம் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்நிலையத்தில் நிறுத்தம் பெற வழிவகை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் திருவெறும்பூரில் நின்று செல்லும் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை நினைவுகூரும் வகையில், நேற்று மதியம் திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு துரை வைகோ எம்.பி. தலைமையிலான ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் துரை வைகோ எம்.பி. பச்சைக்கொடியசைத்து ரெயிலின் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்ததுடன், அந்த ரெயிலில் பயணம் செய்து மக்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
English Summary
Public demand fulfilled Express train service at Thiruverumbur railway station