வனப்பகுதியில் அதிரடி முடிவு: ரவுடி அழகுராஜா என்கவுன்ட்டரில் பலி...!
Dramatic decision forest area Rowdy Alaguraja killed encounter
பெரம்பலூர் மாவட்டம் விருமந்துறை அருகே இன்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நடந்தது. போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த ரவுடி அழகுராஜா, வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மீட்க அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் உதவி ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு, உயிர் தப்பிக்க ஓட்டம் பிடித்த அழகுராஜாவை தடுக்க மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் படுகாயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவத்திற்கு முன்னதாக, கடந்த 24ஆம் தேதி ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் சென்ற போது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், அழகுராஜா முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்து மேலும் ஆயுதங்களை கைப்பற்றும் நோக்கில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை வனப்பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்ற போது, எதிர்பாராத முறையில் தாக்குதல் நடத்தி தப்ப முயன்றதால் என்கவுன்ட்டர் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் வெட்டுக் காயமடைந்த உதவி ஆய்வாளர் சங்கருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி அழகுராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட செய்தி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dramatic decision forest area Rowdy Alaguraja killed encounter