பாலம் பழுது பார்ப்பு எதிரொலி: சேலம் வழித்தட ரெயில் சேவைகளுக்கு தற்காலிக நிறுத்தம்...!
Bridge repair work Train services Salem route temporarily suspended
திருச்சி கோட்டை – ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று 3 ரெயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, சேலம் – கரூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76821), மயிலாடுத்துறை – சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16811) மற்றும் சேலம் – மயிலாடுத்துறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16812) ஆகிய மூன்று ரெயில்களும் இன்று இயக்கப்படாது.
பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Bridge repair work Train services Salem route temporarily suspended