'சென்னை மேயருக்கே இந்த நிலையா'...? மர்ம நபர் கொடுத்த டார்ச்சர்... போலீசில் அதிரடி புகார் அளித்த மேயர் பிரியா...! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, காவலர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்துக்குச் சென்ற மாநகராட்சி மேயர் பிரியா, காவல் ஆணையர் அமல் ராஜை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் பிரியா தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மாநகராட்சி அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு தொல்லை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி மேயருக்கே அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is this case Chennai Mayor Torture by mysterious person Mayor Priya files complaint police


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->