'நாங்கள் இருக்கிறோம்'...! சிறையில் இருக்கும் திமுக எம்.எல்.ஏ.வுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆதரவு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசியபோது, முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதுடன், மிரட்டல் விடுக்கும் வகையிலும் கருத்துகளை தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மார்க்கண்டேயனை கடந்த 21-ந்தேதி காவலர்கள் கைது செய்தனர். பின்னர் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, மார்க்கண்டேயன் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், சிறையில் உள்ள மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

பாளையங்கோட்டை சிறைக்குச் சென்ற அவர், மார்க்கண்டேயனை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்து ஆறுதல்  தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் பாளையங்கோட்டை சிறைக்குச் சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We are here Udhayanidhi Stalin personally supports imprisoned DMK MLA


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->