'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இழிவா...?' - 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் பொங்கிய கனிமொழி...!
Is it disgrace to congratulate Tamil Mother Kanimozhi upset after being relegated 3rd place
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட்ட மரியாதை குறித்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழா தொடக்க நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றதாக வெளியான தகவலுக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தனது வழக்கமான முதலிடத்தை இழந்து, மூன்றாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் வழங்கப்பட்டு வந்த மரபு மற்றும் மரியாதைக்கு எதிரான செயலாக கருதப்படுவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே பதிவில், "வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?" என்று முன்பு கேள்வி எழுப்பியவர்கள், தற்போது இந்த விவகாரம் குறித்து ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? இதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கனிமொழியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமை மற்றும் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Is it disgrace to congratulate Tamil Mother Kanimozhi upset after being relegated 3rd place