அரசியலுக்கு வரும் தனுஷ்? விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரை சந்திக்கும் தனுஷ்?பிரபலம் சொன்ன சீக்ரெட்! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூரில் அவரது ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷின் உரை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தேசிய திரைப்பட விருதுகள் குறித்து தனது கருத்தை பகிர்ந்தார். "'ராயன்' படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால் அந்த ஆண்டில் அதைவிட சிறந்த படங்களும் வெளியாகியிருந்தன. அந்தப் படங்களின் ரசிகர்களின் வருத்தத்தையும் நான் மதிக்கிறேன்" என்று கூறிய அவர், தனது திரைப்பயணத்தில் 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன', '3', 'மரியான்', 'ராஞ்சனா', 'வடசென்னை', 'கர்ணன்' உள்ளிட்ட படங்களுக்கும் தேசிய விருது கிடைக்காததை நினைவுகூர்ந்தார்.

மேலும், "அப்போது யாரும் கேட்கவில்லை. இன்று பலர் பேசுகிறார்கள். தட்டிவிடாதீர்கள்... தட்டிக்கொடுங்கள். அஜித் சொன்னது போல, 'நீயாக தோற்றுவிட்டேன் என்று ஒத்துக்கொள்ளும் வரை உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது'. நம் கூட்டத்துக்கு ஒற்றுமையும் நோக்கமும் இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். உங்கள் பாதுகாப்பே முக்கியம். ஓம் நமசிவாய... ஜெய்" என்று தனது உரையை நிறைவு செய்தார்.

தனுஷின் இந்தப் பேச்சும், சமீப காலமாக ரசிகர் மன்றம் சார்பில் அதிக அளவில் நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதும், அவர் அரசியல் களத்தில் களமிறங்கத் தயாராகிறாரா என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.

இந்தச் சூழலில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கூற்றுப்படி, முதல்வர் விஜய்யின் அரசியல் வெற்றியை துல்லியமாக கணித்ததாக கூறப்படும் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டை சந்திக்க நடிகர் தனுஷ் நேரம் கேட்டிருப்பதாகவும், எதிர்கால அரசியல் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு அரசியல் ரீதியாக ஆதரவு கிடைக்கக்கூடும் என்றும் அந்தணன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் அரசியலுக்கு வருவது, ஜோதிடரை சந்திப்பது அல்லது உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் களமிறங்குவது தொடர்பாக இதுவரை தனுஷ் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பான யூகங்கள் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Dhanush entering politics Is he meeting Vijay trusted astrologer A celebrity reveals the secret


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->