பி.எஸ்.என்.எல். 5ஜி தாமதத்துக்கு பின்னணியில் சதியா...? மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சுடச்சுட கேள்வி...! - Seithipunal
Seithipunal


“பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 5ஜி சேவை தாமதத்துக்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவித்து, சேவை தொடங்குவதற்கான உறுதியான காலக்கெடுவை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை திட்டமிட்டு பின்னுக்குத் தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமான போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடித்து வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

5ஜி அலைக்கற்றை வசதி என்பது தற்போதைய காலகட்டத்தில் வசதி மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய முக்கிய தேவையாக மாறியுள்ளது. மாணவர்களின் உயர்கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கிராமப்புறங்களில் நடைபெறும் சிறு வணிகங்கள், விவசாயிகளின் அன்றாட அரசு சேவைகள் என பல்வேறு தேவைகளுக்கு வேகமான இணைய சேவை அவசியமாகியுள்ளது.

இத்தகைய சூழலில், தனியார் நிறுவனங்களின் இணைய சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. அந்த நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பெருநிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி வரும் நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தேவையான நவீன கருவிகள், போதிய நிதி மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய காலத்தில் வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சந்தைப் போட்டியில் அந்த நிறுவனத்தின் பங்களிப்பை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.தனியார் பெருநிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிவேக இணைய வசதி கிடைப்பதில் ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணங்களை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

மேலும், நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் தரமான அதிவேக 5ஜி சேவையை தொடங்குவதற்கான உறுதியான காலக்கெடுவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவரது சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is BSNL behind the 5G delay Tamil Nadu Right to Life Party leader Velmurugan burning question central government


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->