தொகுதி மாறுகிறாரா அண்ணாமலை..அரவக்குறிச்சியா? காங்கேயமா? பாஜக முடிவு என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதிக்கு மாறுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. டெல்லி பாஜக தலைமையின் ஆலோசனையுடன், காங்கேயம் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அவர் களமிறங்க உள்ள தொகுதி குறித்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

2021 சட்டசபைத் தேர்தலில், அதிமுக–பாஜக கூட்டணியின் சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் இளங்கோ 93,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணாமலை 68,553 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக பள்ளப்பட்டி நகராட்சி வாக்குகள் அமைந்ததாக கூறப்பட்டது.

பள்ளப்பட்டி நகராட்சியில் சுமார் 31 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்கள் இருந்த நிலையில், அங்கு பதிவான வாக்குகளில் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் திமுக வேட்பாளருக்குச் சென்றன. சில வார்டுகளில் அண்ணாமலை வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக கூறப்பட்டதும், அவரது அரசியல் பயணத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால், அப்பகுதியில் அண்ணாமலையின் தோல்வி கடுமையான பின்னடைவாக பார்க்கப்பட்டது.

மேலும், கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையின் பேச்சுகள் பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்பை உருவாக்கின. இதன் காரணமாக அப்பகுதிகளில் பிரசாரம் செய்வதே கடினமான நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், SIR பணிகள் காரணமாக பள்ளப்பட்டி நகராட்சியில் தற்போது சுமார் 5 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடலாமா என்ற கேள்வி எழுந்தாலும், அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் அண்ணாமலை தரப்பு அதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை தற்போது அரசியலில் மேலும் முதிர்ச்சி அடைந்துள்ளார் என்றும், பாஜக தலைமையிடமும் அவரது மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிமுக–பாஜக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் பெரிதளவில் இணையும் வாய்ப்பு இல்லை என்பதும், கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ தற்போது திமுக பக்கம் நெருக்கம் காட்டி வருவதும், அரவக்குறிச்சி தொகுதியை அண்ணாமலை தவிர்க்கக்கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

இதனால், இம்முறை அரவக்குறிச்சி அல்லாமல் காங்கேயம் போன்ற வேறு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், வரும் நாட்களில் பாஜக தலைமை இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Annamalai changing constituency Is it Aravakurichi Is it Kangeyam What is the BJP decision


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->