ஓரங்கட்டப்படும் அண்ணாமலை? அமித்ஷாவின் வியூகம் இதுதான்– உண்மையை உடைத்த துக்ளக் குருமூர்த்தி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து, ‘துக்ளக்’ வார இதழ் ஆசிரியரும் மூத்த சிந்தனையாளருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இது பாஜக தலைமையும், அண்ணாமலையும் சேர்ந்து எடுத்த முடிவாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுத்த அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழாவில், வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த குருமூர்த்தி, தமிழக அரசியலில் யதார்த்தத்தை புரிந்து கொண்டு உத்திகளை வகுப்பதே முக்கியம் எனக் கூறினார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அதற்கேற்ற அரசியல் யுக்திகள் தேவை என்றும், அந்த யுக்திகளை வகுப்பதில் அமித்ஷா திறமையானவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது அமித்ஷாவின் வியூகத்தால்தான். அதேபோல் தற்போது தமிழ்நாட்டையும் அவர் கையில் எடுத்துள்ளார். அண்ணாமலையும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்” என குருமூர்த்தி தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு பாஜகவுடன் நெருங்கக் கூடாது என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி மாற்றிக் கொண்டு, திமுகவை வீழ்த்த பாஜக உடன் இணைவது அவசியம் என்ற எண்ணத்திற்கு வந்திருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்வின் போது, தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கும் குருமூர்த்தி பதிலளித்தார். விஜய்க்கு எத்தனை சதவீத வாக்கு வங்கி உள்ளது என்பது தேர்தலில் நின்றால்தான் தெரிய வரும் என்றும், தற்போது அவருக்கு பின்னால் இருப்பது ஒரு கூட்டம் மட்டுமே என்றும் விமர்சித்தார். “அவருடைய கட்சியில் உறுதியான தொண்டர் அமைப்பும், தெளிவான தலைமையும் இல்லை. அவர் முதலமைச்சர் ஆவார் என பேசுவது அபத்தம்” எனக் கூறினார்.

மேலும், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு, “அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் தெரிந்திருக்க வேண்டும். இதை அவரிடமே கேட்க வேண்டும்” எனக் கூறி பதிலளித்தார்.

இந்த கருத்துகள், தமிழக அரசியலில் பாஜக மேற்கொண்டு வரும் புதிய வியூகங்கள் மற்றும் எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் குறித்த விவாதங்களை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Annamalai being marginalized This is Amit Shah strategy Tughlak Gurumurthy broke the truth


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->