10 நிமிடங்கள்… 10 ஆண்டுகள் போல: கமல்ஹாசன் சந்திப்பை நினைவுகூர்ந்த ஊர்வசி மகள்...! - Seithipunal
Seithipunal


‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்த நடிகை ஊர்வசி, தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்து, தனக்கென அழிக்க முடியாத அடையாளத்தை உருவாக்கினார். கமல்ஹாசனுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர்.

கால ஓட்டத்தில் குணச்சித்திர வேடங்களிலும் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, இன்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.இந்த நிலையில், ஊர்வசியின் திரை மரபைத் தொடர்ந்து அவரது மகள் தேஜலட்சுமிவும் சினிமா உலகில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மலையாளத்தில் உருவாகும் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் தேஜலட்சுமி, ‘பாப்லோ பார்ட்டி’ என்ற படத்தில் தாய் ஊர்வசியுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில், ஊர்வசியும் அவரது மகள் தேஜலட்சுமியும் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தேஜலட்சுமி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மனதைத் தொடும் ஒரு நினைவுச் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவில், “2001-ஆம் ஆண்டு, நான் குழந்தையாக இருந்தபோது, அம்மா நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன். அப்போது நான் சினத்தில் அழுதால், கமல் சார் என்னை தூக்கிக் கொண்டு சென்று, எனக்கு பிடித்த உணவை ஊட்டி சிரிக்க வைப்பார்.

அதன்பின் நான் அழுவதே இல்லை. அந்த நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷ நினைவுகள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், “கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் மிக அருகில் இருந்தும், எனக்கு ‘ஹாய்’ கூட சொல்ல தைரியம் வரவில்லை.

அதனால் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். அப்போது அம்மா, ‘கவலைப்படாதே மோலே… ஒருநாள் நிச்சயம் அவரை நேரில் சந்திப்போம்’ என்று என்னை தேற்றினார். அந்த நாளுக்காக நான் தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்.

இறுதியாக அந்த நாள் வந்தது. அவரை வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தேன்; ஆனால் அந்த 10 நிமிடங்கள், பத்து ஆண்டுகளாக மனதில் பதிந்த கனவுகள் நனவான தருணமாக உணர்ந்தது” என்று தனது மனநிலையை பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 minutes felt like 10 years Urvashi daughter recalls meeting Kamal Haasan


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->