30 ஆண்டுகளுக்குப் பிறகு நகராட்சியில் புதிய அரசியல் கோட்பாடு: பா.ஜ.க. கூட்டணி ஆதிக்கம்...!
new political dynamic municipality after 30 years BJP alliance dominates
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இன்று காலை 10 மணியளவில் வாக்குகள் எண்ணல் தொடங்கியது. மொத்த 893 வார்டுகளுக்கு 3.48 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.இந்த தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்புடனே காணப்பட்டன. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மும்பை மாநகராட்சியில் அரசியல் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. பா.ஜ.க.–ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணி ஒருபுறம், உத்தவ் தாக்கரே சிவசேனா–ராஜ் தாக்கரே MNS–சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றொரு பக்கமாக களமிறங்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் கட்சியுடன் கூட்டணி செய்து, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டார். புனே மாநகராட்சியில் பா.ஜ.க.–ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக, உத்தவ் சிவசேனா மற்றும் MNS கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.
மும்பை தேர்தலை மிக முக்கியமான அரசியல் நிகழ்வு என்று கருதப்படும் முக்கிய காரணம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒரே மேடை மீது இணைந்திருப்பதே. பழைய அரசியல் அடையாளம், செல்வாக்கை மீட்டெடுக்க தாங்கள் முயற்சி செய்கிற நிலையில், பா.ஜ.க.–மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இறங்கியுள்ளது.
தேர்தலையொட்டி கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.–மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. இன்று வாக்குகள் எண்ணல் தொடங்கியதும், ஆரம்பத்திலேயே பா.ஜ.க.–ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணி பல இடங்களில் முன்னிலை வகித்தது.மும்பை மாநகராட்சியில் பா.ஜ.க. 58 இடங்களில், ஷிண்டே சிவசேனா 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தாக்கரே சிவசேனா 45 இடங்களில், ராஜ் தாக்கரே கட்சி 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
நவி மும்பை: பா.ஜ.க.–ஷிண்டே சிவசேனா கூட்டணி முழு ஆதிக்கம்; பா.ஜ.க. 22, ஷிண்டே சிவசேனா 25 இடங்களில் முன்னிலை.
நாக்பூர் மாநகராட்சி: பா.ஜ.க. 73 இடங்களில், ஷிண்டே சிவசேனா 2 இடங்களில், காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலை.
நாசிக்: பா.ஜ.க. 10 இடங்களில், ஷிண்டே சிவசேனா 7, உத்தவ் தாக்கரே சிவசேனா 3 இடங்களில் வெற்றி.
புனே: பா.ஜ.க. 48 இடங்களில், அஜித் பவார் NCP 6, தாக்கரே சிவசேனா 4, ராஜ் தாக்கரே 1 இடத்தில் முன்னிலை.
தானே: பா.ஜ.க.–ஷிண்டே சிவசேனா கூட்டணி முன்னிலை; பா.ஜ.க. 10, சிவசேனா 20 இடங்களில் ஆதிக்கம்.
மொத்தமாக, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சித் தேர்தலில் புதிய அரசியல் நிலவரம் உருவாகியுள்ளது, தாக்கரே சகோதரர்களின் திருப்பம் மற்றும் பா.ஜ.க.–மகாயுதி கூட்டணியின் ஆதிக்கம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new political dynamic municipality after 30 years BJP alliance dominates