ஸ்டாலினா., சுண்டலா.,! சுண்டல்., பொரிக்கு அதிரடியாக தடை விதித்த "ஐபேக்".!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் 'உங்கள் தொகுதிகள் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திருவண்ணாமலையில் முதல் கூட்டம் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆரம்பித்த போதே ஸ்டாலினிடம் மனு அளித்த தொண்டர் ஒருவர், தனக்கு இரண்டு கறவை மாடுகள் வேண்டும் என்று கேட்க., அந்த மனுவை படித்த  மு க ஸ்டாலின் 'கணவரை காணவில்லை' என்று படித்தார். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது. 

இந்நிலையில், ஸ்டாலின் பங்கேற்ற 'உங்கள் தொகுதிகள் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த பந்தலில் மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், மு க ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு முன்பே போடப்பட்டிருந்த இருக்கைகள் பாதி காலியாகிவிட்டது. கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பலரும் ஸ்டாலின் மேடையில் பேசிக் கொண்டிருக்க, வந்தவர்கள் மைதானத்தை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர்.

இதுபோல தொடர்ந்து ஸ்டாலின் மேடையில் ஏறும் முன்பே அழைத்து வரப்பட்டவர்கள் மைதானத்தை சுற்ற  ஆரம்பித்து விடுகின்றர். இதனையடுத்து மைதானத்தில் சுற்றி பார்க்க என்னதானிருக்கிறது என்று ஐபேக் டீம் (திமுகவின் தேர்தல் வெற்றிக்காக செயல்படும் தனியார் நிறுவனம்) ஆய்வு செய்ததில், அங்கே சுண்டல் மற்றும் பொரி வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டு இருந்து உள்ளது.

ஸ்டாலின் மேடையில் தீயாய் பேசி கொண்டு இருக்க., மைதானத்தில் சுண்டல் வியாபாரம் அனல் பறக்க சுட சுட நடந்து கொண்டு இருந்துள்ளது. உடன்பிறப்புகள் சுண்டலா...,? இல்லை தளபதியா., என்ற மன போட்டியில்., சுண்டல் தான் முக்கியம் என்று தங்கள் இருக்கையை விட்டு., இரு கையிலும் சுண்டலோடு வளம் வர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டாலின் பேசும் கூட்டங்களில் சுண்டல்., பொரி விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாம் ஐ பேக் நிறுவனம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPACK ban sundal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->