தலைக்கேறிய உங்களது ரசிகவெறி மிக மிக ஆபத்தானது - எச்சரிக்கும் இடும்பாவனம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் - சங்கீதா விவகாரத்து குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பரபரப்பான ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், "25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் அவரது மனைவி. விவாகரத்துக்கான காரணங்களில் தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

ஒரு மனைவி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரும்பட்சத்தில் குடும்ப வன்முறை, சித்ரவதை, கணவரின் தவறான நடத்தை, தாம்பத்தியமின்மை போன்றவற்றில் தனக்கு நடந்தவற்றைக் குறிப்பிட்டால்தான் அது விவாகரத்துக்கான வழக்காக நிற்கும்; விவாகரத்து குறித்தப் பரிசீலனைக்கு அது எடுத்துக் கொள்ளப்படும். அந்தவகையில்தான், அதனைக் குறிப்பிட்டிருக்கிறார் அவரது மனைவி. அவரது விவாகரத்து மனு வெளியே கசிந்ததால் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஊடகங்களில் செய்தியாகின; சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளானது. மற்றபடி, அவர் காணொளி வெளியிட்டோ, அறிக்கை வாயிலாகவே, செய்தியாளர் சந்திப்பை நடத்தியோ எதனையும் கூறவும் இல்லை; பொதுவெளியில் வந்து குற்றஞ்சாட்டிப் பேசவும் இல்லை. அப்படி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளுமிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். தனது கணவரின் பிம்பத்தைச் சிதைப்பது நோக்கமாக இருந்திருந்தால், மேற்கூறியவற்றில் ஒன்றையாவது அவர் செய்திருப்பார். ஆனால், செய்யவில்லை. அவர் தன்னைப் பாதிக்கப்பட்ட தரப்பாகக் கருதி, விவாகரத்தும், ஜீவனாம்சமும் கோருகிறார். அதற்காக மனுவில் தனக்கு நடந்தவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவே! அதற்காக அவரைக் கொச்சைப்படுத்துவதும், குணப்படுகொலை செய்வதும், அவருக்கு உள்நோக்கம் கற்பித்து, அரசியல் சாயம் பூசுவதும் படுஅபத்தம்.

அதேசமயம், எல்லா விவரங்களும் ஊடகங்களில் செய்தியானதால் விளக்கம் அளிக்கப் போகிறாரா? மறுப்புத் தெரிவிக்கப் போகிறாரா? இல்லையென்றால், அமைதியாகக் கடந்து, விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளப் போகிறாரா? என்பது கணவர் தரப்பு முடிவு.

இதனைத்தாண்டி, அந்த நடிகரின் அரசியலை எதிர்ப்பதற்கு இதனை ஒரு ஆயுதமாக எடுக்க வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. எடுக்கப் போவதுமில்லை. கடந்தே செல்கிறோம்.

கரூர் பேரவலத்தில் சதி நடந்ததெனப் பொய்யைப் புனைந்து, நடிகரின் தவறுகளை மூடி மறைத்து, அவரை முழுமையாகக் காப்பாற்றிவிட செய்த இழிவானப் பரப்புரை போல, மனைவியின் விவாகரத்து வழக்குக்கும் ஒரு சாயம் பூசி, அவருக்கு உள்நோக்கம் கற்பித்து, அனுதாபத்தை ஏற்படுத்தி, நடிகர் மீதான விசுவாசத்தைக் காட்ட அவரது ரசிகர்கள்/ தொண்டர்கள் முற்படுவார்களேயானால், அதனைவிட அருவருப்பு வேறில்லை. வ

"கரூரில் களத்தைவிட்டு ஏன் வெளியேறினார்?" என அவரைக் கேட்காது, "கரூரில் உடனடியாக அவசர ஊர்திகள் வந்தது எப்படி?" எனக் கேட்டதுபோல, "இப்படி ஒரு குற்றச்சாட்டு மனைவியாலே வருவதுபோல ஏன் நடந்துகொண்டார்?" எனக் கேட்காது, "இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு இப்போது விவாகரத்து மனுவை அளித்தது எதற்காக?" என அவரது மனைவியைக் கேட்பீர்களென்றால், தலைக்கேறிய உங்களது ரசிகவெறி மிக மிக ஆபத்தானது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ntk condemn to tvk vijay fans


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->