நக்குகிற நாய்க்குத்தான் வித்தியாசம் தெரியாது; நாடாளும் முதலமைச்சருக்குமா தெரியாது? அந்தோ பரிதாபம்…! நாஞ்சில் சம்பத் விளாசல்! - Seithipunal
Seithipunal


சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும் , ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றா? என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகி நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், "பிரிட்டிஷ் இந்தியாவின் இந்திய அமைச்சர்களுக்கு ஆலோசகராக அடையாளம் காட்டப்பட்ட அரசியல் ஆளுமை சர்.ஏ.டி. பன்னீர்செல்வம்.

அறிஞர் அண்ணாவுக்கு நிகராக ஆங்கிலம் பேசுகிற ஆற்றலாளர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். தன் தோளில் விழுந்த மாலையை பெரியாரின் தாளுக்கு அணிந்து மகிழ்ந்த இலட்சியவாதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.

அந்தமான் கடலில் ஜலசமாதியான ஏ.டி.பன்னீர்செல்வமும் அறிவாலயத்தில் சமாதியான ஓபிஎஸ்ம் ஒன்றா..?

நக்குகிற நாய்க்குத்தான் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது; நாடாளும் முதலமைச்சருக்குமா தெரியாது? அந்தோ பரிதாபம்…! என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tvk nanjil sambath condemn to dmk mk Stalin ops


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->