உள்கட்சி விவகாரம் எங்களுடையது...! - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற செல்வப்பெருந்தகை
internal party matter ours Selva Perunthagai attempted put end controversies
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"காங்கிரஸ் கட்சிக்குள் எழும் எந்த விவகாரமாக இருந்தாலும், அதை நாங்களே உள்படியாக பேசித் தீர்த்துக்கொள்ளும் முதிர்ச்சி எங்களிடம் உள்ளது.
தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது பாஜகவுக்கு சாதகமாகவோ யாரேனும் கருத்து தெரிவித்தால், அது உடனடியாக கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்படும். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

ஆனால் இந்த விவகாரங்களை வெளியிலுள்ள அரசியல் கட்சிகளும், எங்கள் கூட்டணி கட்சிகளும் தேவையற்ற விதத்தில் பெரிதுபடுத்த வேண்டாம். இது எங்கள் உள்கட்சி விஷயம்.
இதில் தலையீடு செய்து குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தேவையான பரிந்துரைகள் ஏற்கனவே தலைமையிடம் அளிக்கப்பட்டுவிட்டன.தமிழ்நாட்டு மக்களின் மரியாதைக்கு பாதகம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும், தமிழக அரசின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும், அது யார் செய்தாலும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
கூட்டணி கட்சிகளிடம் நண்புறவுடன் சொல்லிக் கொள்கிறேன்.இந்த விவகாரத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டாம்” என்றார்.
English Summary
internal party matter ours Selva Perunthagai attempted put end controversies