உற்சாக வரவேற்பு கொடுத்த இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள்...!- மகிழ்ச்சியில் பிரதமர் மோடி
Indians in England gave a warm welcome Prime Minister Modi is happy
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். மேலும், லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி,இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், அங்கு மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். பிறகு ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
கூடுதலாக இந்தியா-இங்கிலாந்து நடுவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Indians in England gave a warm welcome Prime Minister Modi is happy