அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா.!! மத்திய அரசு பொளேர்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 21ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "கடந்த ஆண்டு முழுவதும் இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த மதத்தின் பெயரில் சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் பல தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்திய சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரமேஷ்குமார், "இந்திய நாடு ஒரு மதசார்பற்ற நாடு. இதில் பன்முகத்தன்மை இன்றியமையாதது. இது ஒரு மாபெரும் ஜனநாயக நாடு.

சிறுபான்மையினர் உட்பட அனைவரின் அடிப்படை உரிமைகளும், அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மதச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டு தான் இருக்கிறது. இந்தியா இதுகுறித்து பெருமைப்படுகிறது. 

இந்தியர்கள் பற்றியும் அரசியல் சட்ட ரீதியாக பாதுகாப்பு பட்ட அவர்களின் உரிமைகள் பற்றியும் கருத்து கூறுவதற்கு வெளிநாடுகளுக்கு அல்லது வெளிநாட்டு அமைப்புக்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார். நாளை மூன்று நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india gives warning to america


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal