பெயர் இல்லை என்றால் முறையிடலாம்… பிறகு ஏன் பரபரப்பு? SIR முடிவை நியாயப்படுத்திய ஜெயக்குமார் - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது,“தமிழக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இப்போது அறிமுகமாகியுள்ள SIR (State Information Report) மூலம் இந்த குழப்பங்களுக்கு இறுதிப் புள்ளி வரலாம் என எதிர்பார்க்கிறோம்.வாக்காளர் பட்டியல் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், இதுவே அதிமுகவின் தெளிவான நிலைப்பாடு.

சென்னை நகரில் சில தொகுதிகளை நாங்களே ஆய்வு செய்தபோது, மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட பெயர்கள் இறந்தவர்கள், வெளியே குடிபெயர்ந்தவர்கள், இல்லாத முகவரிகள் என கண்டறிந்துள்ளோம்.அதனால் தான் வெளிப்படையான தேர்தல் நடைமுறைக்காக SIR-ஐ அதிமுக ஆதரிக்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுயாதீன அமைப்பு. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ‘வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை முறையாக செய்ய வேண்டும்’ என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தோம்.இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடப்பது அல்ல.

மத்திய அரசே மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இது. பாஜக ஆதரிப்பதால் அல்ல,வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகதான் SIR-ஐ ஆதரிக்கிறோம்.விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அப்போது யாருடைய பெயர் காணப்படவில்லை என்றால் அவர்களுக்கு முறையிட முழு வாய்ப்பும் இருக்கிறது. பின்னர் ஏன் தேவையில்லாமல் ‘வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.இவ்வாறு ஜெயக்குமார் கூர்மையான கருத்துகளுடன் பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If there no name you can appeal then why fuss Jayakumar justifies SIR decision


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->