"உடலில் உள்ள அனைத்து மச்சங்களையும் பார்க்க வேண்டும்..." - பாலிவுட் நடிகரின் மெசேஜால் அதிர்ந்த ஜான்வி கபூர்
I need to see all the moles on your body Janhvi Kapoor shocked by a Bollywood actor message
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பாலிவுட் நடிகர் ஒருவர் அனுப்பியதாகக் கூறப்படும் பொருத்தமற்ற தனிப்பட்ட மெசேஜ் குறித்து அவர் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 'தடாக்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'கோஸ்ட் ஸ்டோரீஸ்', 'குஞ்ஜன் சக்சேனா: தி கார்கில் கேர்ல்' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
அதன்பிறகு தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்திய ஜான்வி, ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவரா' திரைப்படத்தில் நடித்தார். பின்னர் ராம் சரணுடன் 'பெத்தி' படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும், ஜான்வியின் கதாபாத்திரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் கரண் ஜோஹருடன் நடைபெற்ற உரையாடலில், "ஏதேனும் ஒரு பாலிவுட் நடிகர் உங்களுக்கு பொருத்தமற்ற தனிப்பட்ட மெசேஜ் அனுப்பியிருக்கிறாரா?" என்ற கேள்வி ஜான்வியிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜான்வி, "ஆம். ஒரு பாலிவுட் நடிகர், 'உங்கள் உடலில் உள்ள அனைத்து மச்சங்களையும் நான் பார்க்க வேண்டும்' என்று எனக்கு மெசேஜ் அனுப்பினார். ஆனால் அந்த நடிகரின் பெயரை நான் கூற விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஜான்வியின் இந்த பதிலைக் கேட்ட அவரது சகோதரி குஷி கபூரும் அதிர்ச்சி அடைந்ததாக நிகழ்ச்சியில் கூறப்பட்டது.
நடிகரின் பெயரை ஜான்வி கபூர் வெளியிடாத நிலையில், அவரது இந்த வெளிப்படைப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் தனியுரிமை மீறல்கள் மற்றும் பொருத்தமற்ற நடத்தைகள் குறித்து மீண்டும் கவனம் திரும்பியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
I need to see all the moles on your body Janhvi Kapoor shocked by a Bollywood actor message